தமிழில் தட்டச்சு செய்ய 3 சிறந்த இலவச மென்பொருட்கள்

Submitted by Karthikeyan on Oct 26, 2013 - 20:41


இணையத்தில் தமிழில் தட்டச்சு செய்ய ஏராளமான மென்பொருட்கள் உள்ளன. இருப்பினும் அவற்றில் சிறந்த, மிகவும் பிரபலமான 3 மென்பொருட்களையும் அவற்றின் சிறப்புகளையும் இந்த பதிவில் காணலாம்.

இந்த 3 மென்பொருட்களும் (Software) முற்றிலும் இலவசமானவை, விளம்பரம், சோதனை கால கட்டுபாடுகள் (Trial period restrictions), வணிக பயன்பாட்டிற்கான தடை (Commercial use)  போன்றவை அற்றது. எனவே எந்தவித அச்சமும் இன்றி பயன்படுத்தலாம். 

தமிழில் தட்டச்சு செய்ய தமிழ் தட்டச்சு கற்றிருக்க வேண்டும் என்ற காலமெல்லாம் மலையேறிவிட்டது. ஒலிபெயர்ப்பு (Transliteration) முறையில் எந்த மொழியை வேண்டுமானாலும் ஆங்கில விசைப்பலகை மூலம் தட்டச்சு செய்யலாம். பின்வரும் மூன்று கருவிகளும் ஒலிபெயர்ப்பு முறையை ஆதரிக்கக்கூடியது. 

1. மைக்ரோஸாப்ட் இந்திய மொழி உள்ளீட்டு கருவி (Microsoft Indic Language Input Tool)

 • இது விண்டோஸின் மொழிப்பட்டையில் (Language Bar) இணைந்து செயல்படும். 
 • விண்டோஸின் விசைப்பலகை அமைப்பில் இணைந்து செயல்படும்
 • ஒலி பெயர்ப்பு (Phonetic transliteration)
 • யுனிகோட் (unicode) எழுத்துருவை (font) மட்டுமே ஆதரிக்கும்.
 • தற்போதைய பதிப்பு 10 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. ( Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Oriya, Punjabi, Tamil, Telugu)
 • திரை விசைப்பலகை உதவிக்காக உள்ளது.

 

இதனை பதிவிறக்க (Download) MS Indic Input Tool

 

2. விண்டோஸிற்கான கூகிள் உள்ளீட்டு கருவி (Google Input Tools for Windows)

Google Input Tools

 • இது விண்டோஸின் மொழிப்பட்டையில் (Language Bar) இணைந்து செயல்படும். 
 • விண்டோஸின் விசைப்பலகை அமைப்பில் இணைந்து செயல்படும்
 • ஒலி பெயர்ப்பு (Phonetic transliteration)
 • யுனிகோட் (unicode) எழுத்துருவை (font) மட்டுமே ஆதரிக்கும்.
 • தற்போதைய பதிப்பு 13 இந்திய மொழிகள் (Bengali, Gujarati, Hindi, Kannada, Malayalam, Marathi, Nepali, Oriya, Punjabi, Sanskrit, Tamil, Telugu, Urdu) உட்பட 22 மொழிகளை ஆதரிக்கிறது. 
 • திரை விசைப்பலகை உதவிக்காக உள்ளது. 
 • இதன் திரையமைப்பை விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம். 
 • மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய செயல்களை மேக்ரோவாக (Macro) சேமித்து கொள்ளலாம். 

இதனை பதிவிறக்க (Download Google Input Tools for Windows)

 

3. NHM Writer

 • இது விண்டோஸின் மொழிப்பட்டையில் (Language Bar) இணையாது.
 • இது பல்வேறு வகைப்பட்ட விசைப்பலகை அமைப்பை ஆதரிக்கும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.
 • ஒலி பெயர்ப்பு (Phonetic transliteration), தமிழ் பழைய விசைப்பலகை, புதிய விசைப்பலகை, பாமினி விசைப்பலகை தமிழ் 99 விசைப்பலகை போன்றவற்றை ஆதரிக்கக் கூடியது. 
 • யுனிகோட் (unicode), பாமினி (Bamini), TAM (தமிழ்), TAB (தமிழ்-ஆங்கிலம்), TSC, வானவில், சாஃப்ட் வியூ (Soft view), ஷிரிலிபி (Shrilipi) போன்ற பல்வகை எழுத்துருக்களையும் ஆதரிக்கும்.
 • தற்போதைய பதிப்பு 10 இந்திய மொழிகளை ஆதரிக்கிறது. 
 • திரை விசைப்பலகை உதவிக்காக உள்ளது. 
 • மீண்டும் மீண்டும் செய்யவேண்டிய செயல்களை மேக்ரோவாக (Macro) சேமித்து கொள்ளலாம். 
 • நாம் விரும்பியவாறான விசைப்பலகை அமைப்பை உருவாக்கி இதில் இணைத்து பயன்படுத்தலாம்.
 • விசைப்பலகை குறுக்கு வழிகளை (Keyboard Shotcuts) விசைப்பலகை அமைப்பை அல்லது மொழியை மாற்றுவதற்கு விரும்பியவாறு அமைத்து கொள்ளலாம். 

 

மேலும் NHM Writer பற்றி அறிய இங்கு சுட்டவும்

NHM Writer 2.0 பதிவிறக்க

முடிவுரை :

நீங்கள் யுனிகோட் எழுத்துருவை (Unicode font) மட்டும் பயன்படுத்துவதாக இருந்தால் Microsoft Indic language Input Tool அல்லது Google Input Tool ஐ பயன்பத்தலாம். 

அல்லது நீங்கள் பலவித எழுதுருக்களை பயன்படுதுவோரானால், அல்லது டி.டி.பி (DTP),  அச்சிடும் பணி செய்வோரானால் NHM Writer ஐ பயன்படுத்தலாம்.  தேவையான எழுதுருக்களை தனியே பதிவிறக்கி நிருவி கொள்ள வேண்டும். 

Category